ஐபிஎல் அணிகளுக்கு காத்திருக்கும் பெரிய பிரச்சனை: சிஎஸ்கே சிஇஓ தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் உள்ள பிரச்சனை குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு செல்வதில் உள்ள பிரச்சனை குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து InsideSport ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், வழக்கம்போல் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி பலமாகவே உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரத்துக்கு வரும் ஜூலை 21-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அனைத்து அணிகளும் முன்கூட்டியே சென்று ஹோட்டல்களை புக் செய்ய வேண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தயாராக வேண்டும். ஆனால் விமான சேவை தடையால் அனைத்து வேலைகளும் தாமதம் ஆகியுள்ளதாக காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.