அதிகமாக ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ள ஊர் எது தெரியுமா? 2024 Online Shopping
ஆன்லைனில் அதிகம் விற்ற பொருள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்
வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருள்களையும் ஆன்லைனில் வாங்கும் தளமாக செப்டோ, ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிளின்க் இட் செயல்பட்டு வருகிறது.
இவற்றில் இந்த ஆண்டு முழுவதும் எந்தெந்த பொருள்களை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளது. சராசரியாக ஒரு டெலிவரி இன்ஸ்டாமார்டில் 8 நிமிடங்களிலும், செப்டோவில் 9 நிமிடங்களிலும் பிளின்க் இட்டில் 11 நிமிடங்களிலும் செய்யப்படுகிறது.
ஸ்நாக்ஸ்தான் டாப்
ஸ்நாக்ஸ் மற்றும் குளிர் பானங்கள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பிளின்க் இட்டில் 1.85 கோடி கோலா, 84 லட்சம் தம்ப்ஸ் அப், 14.6 லட்சம் மாசா என குளிர் பானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பயனர்கள் 60 கோடி ரூபாய்க்கு உடனடி நூடூல்ஸ்களை மட்டுமே வாங்கியுள்ளனர்.
பிளின்க் இட் தளத்தில் அதிகபட்சமாக 17.6 லட்சம் ஆணுறைகள், செப்டோவில் பெங்களூரு பயனர்கள் 4 லட்சம் ஆணுறைகள், இன்ஸ்டாமார்டில் ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு 140 பொருள்களிலும் ஒன்று பாலியல் சார்ந்ததாக இருந்துள்ளது.