கல்யாண பரிசில் ஆணுறை - பாஜக அரசு நிகழ்ச்சியில் மணமக்கள் அதிர்ச்சி!
அரசு இலவசமாக வழங்கிய மேக்கப் கிட்டில் ஆணுறைகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சி
மத்தியப் பிரதேசத்தில் அரசு செலவில் முக்கியமந்திரி கன்யா திட்டத்தின் கீழ் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அந்த வகையில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜபுவா மாவட்டத்தில் 296 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதில், மணப்பெண்களுக்கு பரிசாக அரசு சார்பில் மேக்கப் கிட் வழங்கப்பட்டன. அதில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதிர்ச்சி
இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தொடர்ந்து, இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் தன்வி ஹுடா, ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விழிப்புணர்வுக்காக சுதாகரத்துறை சார்பிஙல் வழங்கப்பட்டுள்ளது.
அவை மேக்கப் பாக்ஸில் வைக்கப்படவில்லை. தனியாகதான் திருமண ஜோடிகளுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

viral video: அச்சுறுத்திய நபரை வெறியோடு கடிக்க பாய்ந்த பாம்பு... பலரும் கண்டிராத பதறவைக்கும் காட்சி! Manithan

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
