இளைஞர்களுக்கு இலவச ஆணுறை : அரசின் அறிவிப்பால் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு ஆணுறை
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில வருடங்களாக இளம் வயதிலேயே கர்ப்பமாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிகையினை குறைக்க பிரான்ஸ் அரசு ஆலோசனை நடத்தியது,
அதனபடி எதிர்பாராத கர்ப்பம் மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதை குறைக்கும் முயற்சியாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச ஆணுறைகளை வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது
கருத்தடை மருந்துகளும்
அதே போல அதுமட்டுமின்றி கருத்தடை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது இதனால் தேவையில்லாத கர்ப்பம் குறையும் என்றும் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது
அதே சமயம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் அரசே செயல்படுத்தி இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள