சீனாவில் ஆணுறை விற்பனை அதிகரிப்பு - தயாரிப்பில் ஆர்வம் காட்டும் கம்பெனி..!
சீனாவில் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளதால் மென்மையான ஆணுறையை தயாரிக்க ரெகிட் கம்பெனி ஆர்வம் காட்டி வருகிறது.
ஆணுறை விற்பனை அதிகரிப்பு
இது குறித்து டியூரக்ஸ் என்ற ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரெகிட் நிறுவனத்தின் சி.இ.ஓ. துரந்த் கூறும்போது,
ஒட்டுமொத்தத்தில் பொருளாதார மீட்சியில் சற்று மந்தம் காணப்பட்டாலும், தம்பதியை உற்சாகமூட்டும் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்து உள்ளது.
முதலில், இந்த ஆணுறைகளுக்கு புதிய மூலப்பொருட்களை கொண்ட புதுமையான விசயங்களை புகுத்தினோம்.
இரண்டாவது விசயம், சீனாவில் இரவு வாழ்க்கையை மக்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர் என கூறியுள்ளார்.
புதிய வகையில் தயாரிக்க திட்டம்
இதனால், அந்நிறுவனத்திற்கு கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மொத்த வருவாய் வளர்ச்சி 8.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து உள்ளது.
சீனாவில், இதுவரை இல்லாத வகையில் மிக மென்மையான ஆணுறைகளை தயாரிக்கும் திட்டம் உள்ளது என்றும், அதற்கான திட்ட பணிகள் 2026-ம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என்றும் ரெகிட் நிறுவன வலைதளம் தெரிவிக்கின்றது.