ஆணுறை பயன்படுத்துவது குறைந்து விட்டது... விற்பனை கடும் வீழ்ச்சி - வெளியான ஆய்வு தகவல்

condom sales plummet
By Nandhini Feb 05, 2022 08:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கொரோனா ஊரடங்கில் மக்கள் அதிகமாக ஆணுறைகளை பயன்படுத்தவில்லை என்று ஆய்வில் தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய ஊடகம் நிக்கெய்.

இந்த ஊடகத்தில் ஆணுறைகளைப் பயன்படுத்துவது குறைந்து வருவதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சென்ற வருடம் மட்டும் ஆணுறை பயன்பாடு குறைந்து விற்பனை சுமார் 40 சதவிகிதம் வீழ்ந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான கேடக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கைத் இது குறித்து பேசினார்.

இது குறித்து அவர் பேசுகையில், ஆணுறை பயன்பாடு குறைந்ததற்குக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் நலனுக்கான மையங்களும் மூடப்பட்டதேயாகும். மலேசியாவைச் சேர்ந்த கேடக்ஸ் நிறுவனம் தற்போது மருத்துவ கையுறைகள் தயாரிப்பு வர்த்தகத்தில் லாபம் பெருகியிருப்பதைக் குறிப்பிட்டு, தற்போது கையுறை தயாரிப்புக்காக தாய்லாந்தில் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படும் என்றார்.

சுமார் 140 நாடுகளுக்கு ஆணுறைகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் `டியூரெக்ஸ்’ என்ற பெயரில் ஆணுறைகளை விற்பனை செய்கிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக, கேடக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 18 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

மேலும், இதே காலகட்டத்தில் மலேசியாவின் பங்குச் சந்தையும் சுமார் 3.1 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ந்திருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகளில், உலகம் முழுவதும் பதின் வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் ஆணுறைகளை பயன்படுத்தினால் சுமார் 6 மில்லியன் தேவையற்ற பிரசவங்களும், ஆபத்தான முறையில் செய்யப்படும் 2 மில்லியன் கருக்கலைப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது.