ரூ.1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய வாடிக்கையாளர் - ஷாப்பிங் ஷாக் ரிப்போர்ட்
வாடிக்கையாளர் ரூ.1.6 லட்சத்துக்கு ஆணுறைகள் வாங்கியுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்விக்கி
ஸ்விக்கியின் ஆன்லைன் வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட் 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 3 ஐபோன் 17 களை ஒரே நேரத்தில் ரூ.4.3 லட்சம் செலவழித்து வாங்கியுள்ளார். அதேப்போல், நொய்டாவை சேர்ந்த டெக்னோ-ஹாலிக் நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கர்கள், எஸ்எஸ்டிகள் வாங்க ரூ.2.69 லட்சம் செலவிட்டுள்ளது.
2025 காதலர் தினம் கொண்டாட்டத்துக்காக இந்திய வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 666 ரோஜா பூக்கள் ஆர்டர் செய்துள்ளார்கள். தந்தேராஸ் பண்டிகையின்போது தங்கம் ஆர்டர்கள் அதிகமாக காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 400% அதிகம்.
2025 ரிப்போர்ட்
பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் தனது டெலிவரி பாய்க்கு ஒரு வருடத்தில் ரூ.68,600 டிப்ஸ் கொடுத்துள்ளார். 127 ஆர்டர்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டரகளில் ஆணுறை முக்கிய இடம் பிடித்துள்ளது.
குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆணுறைகள் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ரூ.1 லட்சத்துக்கு ஆணுறைகள் வாங்கியுள்ளார்.
இதன் மூலம் தனது தளத்துக்கு அவர் செலுத்திய கட்டணம் ரூ. 1,06,398 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ரூ.2.41 லட்சம் மதிப்புள்ள செல்லப்பிராணிகளுக்கு பொருட்கள் வாங்கியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் சில சுவாரஸ்யமான ஆர்டர்களில் கறிவேப்பிலை, தயிர், முட்டை, பால் மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்ட சமையலறை பொருட்கள் இந்தியா முழுவதும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. அதே போல் பெங்களூருவை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் நூடுல்ஸுக்கு ரூ.4,36,153 செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.