சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ராகுல் காந்தி நடைபயணத்திற்கு நிபந்தனை
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்?
சீனாவில தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதையடுத்து அவர் நடத்தும் யாத்திரையில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல்காந்திக்கு மத்திய அரசு நிபந்தனை
இந்த நடைபயணத்தில் சுமார் ஆயிரக்கணக்காணோர் ராகுதில் காந்தியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்த வாய்ப்புள்ளதால் நடைபயணத்தின் போது கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும்,

கோவிட் நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.