போலீசாருக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு

Tamil Nadu Police
By Thahir Nov 08, 2022 03:49 AM GMT
Report

காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

காவல் நிலையங்களுக்கு அறிவுரை

தமிழ்நாடு காவல்துறையில் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

போலீசாருக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி சைலேந்திர பாபு | Compulsory One Day Holiday

இவ்விழாவில் கலந்துகொண்டு காவலர்களுக்கு பரிசளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு, பண்டிகை காலங்களிலும், சட்ட-ஒழுங்கு பிரச்னை சமயங்களிலும் கடைப்பிடிக்க இயலாது.

இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்பதை கடைபிடிக்க, முடிந்த வரை அனைத்து காவல் நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் போலீசாருக்கு பாராட்டு

சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் பண்டிகை காலங்களிலும், காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சேலம் மாநகரில் தற்போது 40% கொலை வழக்குகள் குறைந்துள்ளது. போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.