பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - முதல் இடத்தை பிடித்த தமிழரசனுக்கு கார் பரிசு
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய தமிழரசனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
முதல் இடத்தை பிடித்தவருக்கு கார் வழங்கப்பட்டது
இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நிறைவடைந்தது.
காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காளைகள் பங்கேற்றன. இதில் 23 காளைகளை பிடித்த சின்னபட்டி தமிழரசன் முதல் பரிசை வென்றார்.
அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்த பாலமேடு மணி என்பவர் இரண்டாவது பரிசை வென்றார். 15 காளைகளை பிடித்த பாலமேடு ராஜா மூன்றாவது இடம் பிடித்தார்.