தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் முழு ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் பதில்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும் சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதார துறை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கு என்கிற செய்தியில் உண்மை இல்லை. பரவலைப் பொறுத்து கட்டுப்பாடுகளீ விதிக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அச்சம் தருவதாகவே உள்ளது. மகாராஷ்டிராவைப் போன்ற நிலை உருவாகாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கோவிட் நேரத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சுகாதாரத்துறையிடம் கேட்டுக் கொண்டது. அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். ஒவ்வொரு வாக்குச்சாவடியும் சுத்தம் செய்து, சானிடைசர் வைக்கப்படும். வாக்களிப்பவர்களுக்கு கையுறை, கொரோனா நோயாளிகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்டும்.
வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்தார். தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போடுபவர்கள் தொடர்ந்து போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம், வந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் கண்காணிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை எப்படி வாக்கு சாவடி மையங்களுக்கு அழைத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.
பெரும்பாலும் ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடும் இடத்தில் சராசரியாக 25 முதல் 30 பேர் மட்டுமே செலுத்திக்கொள்கின்றனர்.
6-7 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வரலாம். அவர்களுக்கு பிபி கிட் வசதி ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கிறோம் 4365 படுக்கைகள் சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவமனைகளில் உள்ளது. இதில் 1269 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.