பிரதமரிடம் ஒட்டு மொத்தமாக புகார் கொடுத்த தமிழக பாஜக : சிக்கலில் ஆ. ராசா

DMK BJP Narendra Modi
By Irumporai Jul 30, 2022 05:53 AM GMT
Report

மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ. ராசா பற்றி பாஜக நிர்வாகிகள் நேரில் சொன்ன புகாரினை பிரதமர் கவனத்துடன் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் வந்த மோடி

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் சில முக்கிய தகவல்களை கூறியதாக கூறப்படுகிறது.

பிரதமரிடம் ஒட்டு மொத்தமாக புகார் கொடுத்த தமிழக பாஜக   : சிக்கலில் ஆ. ராசா | Complaints By Administrators To The Prime Minister

அப்போது , திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் தமிழகத்தில் மத மாற்றங்கள் அதிகரித்து விட்டன என்று புகார் சொல்லியிருக்கிறார்கள். அது குறித்து மாநில பொதுச் செயலாளர் ஒருவர், மத அடிப்படைவாத சக்தி உண்டு, எழுச்சி பெற்று இருக்கின்றன

ராசா குறித்து புகார்

சிறுபான்மையினர் தங்களது ஓட்டு வங்கி என்பதால் இது எதையும் திமுக அரசு கண்டு கொள்வதே இல்லை என்று கூறி இருக்கிறார்.   

 அப்போது , திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் தமிழகத்தில் மத மாற்றங்கள் அதிகரித்து விட்டன என்று புகார் சொல்லியிருக்கிறார்கள். அது குறித்து மாநில பொதுச் செயலாளர் ஒருவர், மத அடிப்படைவாத சக்தி உண்டு. எழுச்சி பெற்று இருக்கின்றன .

சிறுபான்மையினர் தங்களது ஓட்டு வங்கி என்பதால் இது எதையும் திமுக அரசு கண்டு கொள்வதே இல்லை என்று கூறி இருக்கிறார்.  

பிரதமரிடம் ஒட்டு மொத்தமாக புகார் கொடுத்த தமிழக பாஜக   : சிக்கலில் ஆ. ராசா | Complaints By Administrators To The Prime Minister

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய ஆ.ராசா, பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன்.

சிக்கலில் திமுக

இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார் ஆவேசமாக.

மேடையில் முதல்வரை வைத்துக்கொண்டே ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆகவே இந்த தகவலை பிரதமரிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.