பாக்கிய லட்சுமி சீரியலுக்கு எதிராக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்..இது தான் காரணமா?

bakiya lakshmi vijay tv serial complaint registered over promo
By Swetha Subash Jan 02, 2022 08:18 AM GMT
Report

பாக்கிய லட்சுமி சீரியல் ப்ரோமோவிற்கு எதிராக சீரியல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கிய லட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு நிலவுகிறது.

ஒரு பெண் தனது வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் சவால்களை கொண்டு இந்த சீரியலின் கதை பின்னப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் ப்ரோமா காட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது.வெளியிடப்பட்ட ப்ரோமோவில்,

“ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு போன் செய்து பாலியல் தொந்தரவு கொடுக்க, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்தப் ப்ரோமோவில் பிரச்னையை பள்ளி நிர்வாகம் மறைக்க முயற்சிக்க, அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் இனியாவின் அம்மா உண்மையை கூறுகிறார்”

இவ்வாறான காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் ப்ரோமோவிற்கு எதிராக முகமது கோஷ் என்பவர் சீரியல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்றும் இவ்வாறான காட்சியை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பும் போது அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முகமது கூறும் போது, “ தற்கொலை என்பது தவறான விஷயம். அதில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. இதை நாம் அழுத்தமாக சொல்ல வேண்டும்.

ஒரு வேளை இந்தப் பிரச்னையை பெற்றோரிடம் சொல்லவில்லை என்றால் இது குறித்து போலீஸில் புகார் அளிக்கலாம் என்பதை குழந்தைகளுக்கு கூறியிருக்கிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீண்டும் இவ்வாறான காட்சி அந்த சீரியலின் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.