யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் - நடந்தது என்ன?
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது விஜய் நடித்து வரும் GOAT படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் 2023 ம் ஆண்டு முதல் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வாடகை பாக்கி
அதில், 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

வாடகை ஒப்பந்தத்தை மீறிய யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது வரை யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan