விசாரணையில் கைதிகளின் பற்கள் பிடுங்கிய ஏஎஸ்பி : காவல் அதிகாரியின் கொடூர செயல்
விசாரணை கைதிகள் கடுமையாக தாக்கி பற்களை பிடுங்கிய போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பற்களை பிடுங்கிய காவலர்
கணவன் - மனைவி தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணை கைதிகள் 10 பேரை கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய காவலர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 10 பேரின் பற்களையும் கட்டிங் பிளேயர் கொண்டு பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உதவி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்