இதுக்கு நீ விபச்சாரம் பண்ணலாம்னு அசிங்கமா பேசுறாங்க - கரகாட்ட நாயகி பரமேஸ்வரி குமுறல்..!

Tamil Nadu Police Madurai
By Thahir Apr 13, 2023 06:13 AM GMT
Report

கரகாட்ட பரமேஸ்வரி தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

யூடியூப்பால் பிரபலமான பரமேஸ்வரி 

தமிழகத்தின் திறமையான கலைகளில் ஒன்று கரகத்தை தலையில் வைத்து ஆடும் கரகாட்டம். இந்த கரகாட்டம் காலமாற்றத்திற்கு ஏற்ப கரகத்தை மறந்து கவர்ச்சியை மட்டுமே இந்த கலையின் கண்ணோட்டமாக பார்த்து வருகின்றனர்.

இதில் பல கரகாட்ட பெண் கலைஞர்கள் தங்கள் நடன ஆட்டங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ரசிகர்களின் மனதில் இடம் பெற்று வருகின்றனர்.

கரகாட்டத்தின் பிரபல ஆட்ட நாயகியான பரமேஸ்வரியும் தனது ஆட்டத்தை யூடியூப்பில் பதிவேற்றி பிரபலமானார்.

Complaint at Karakattam Parameshwari Police

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி 29 வயதான இவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும், போன் அழைப்புகள் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் ஆட்டநாயகி பரமேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

குடும்பத்தின் வறுமையை போக்க ஊர் ஊராக சென்று ஆட்டம் ஆடுவதாக பேட்டி 

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரகாட்ட கலையை கெடுக்கும் வகையில் கவரச்சியாக ஆடுவது சரியா? என்ற கேள்விக்கு, தான் கவர்ச்சியாக ஆடவில்லை என்று மறுத்தார்.

Complaint at Karakattam Parameshwari Police

உங்கள் அங்க அசைவுகள் அப்படித்தானே இருக்கின்றது என்றதும் வெட்கத்தால் சிரித்து மலுப்பினார். கணவரை இழந்த நிலையில், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காவே ஊர் ஊராக சென்று கரகாட்டம் ஆடுவதாகவும்,யூடியூப்பிலும் தனியாக வீடியோ பதிவிடுவதாகவும் தெரிவித்த பரமேஸ்வரி,

தான் அரசியல் கட்சி பொறுப்பில் இருப்பதால் தன் மீது கொண்ட பொறாமையின் காரணமாகவே திருநெல்வேலி மணிமாலா,திண்டுக்கல் ஜோதி, பிரியா, அலங்காநல்லுார் காளீஸ்வரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நான் தவறாக செய்யவில்லை

மேலும் இந்த ஆடையை போட்டு இதை பண்றதுக்கு வேற எதாவது பண்ணலாம் (விபச்சாரம் பண்ணலாம் என்று கூறியதாக அவருடன் உடன் இருந்த தாய் தெரிவித்துள்ளார்) என்று கூறுகின்றனர். நான் தவறாக எதுவும் செய்யவில்லை என்றார்.

உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கும் வெளியூர் ஆட்டக்காரர்களுக்கும் உள்ள தொழில் போட்டி என்பது நம்ம கரகாட்டக்காரன் காலத்திற்கு முன்பு இருந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.