பிரச்சாரம் செய்து வந்த அதிமுக இளைஞரணி செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
கோவையில் பிரச்சாரம் செய்து வந்த அதிமுக இளைஞரணி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக, புறநகர் இளைஞரனி செயலாளர் சந்திரசேகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரித்தும் அதிமுகவின் நல்லாட்சி குறித்தும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த அதிமுக புறநகர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
திமுக வழக்கறிஞர்கள், அந்த வழக்கை உடனடியாக விசாரிக்க கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட வழக்கறிஞரும், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகின்ற கார்த்திகேய சிவசேனாபதி பதியின் முதன்மை முகவருமாக வழக்கறிஞர் மயில்வாகனம் என்பவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, அவதூறு பேசியதாக அதிமுகவை சேர்ந்த வடவள்ளி சந்திரசேகர் என்பவர் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு குறித்தான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக கட்சியின் சார்பில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் வாகன பிரச்சாரத்தின்போது, வடவள்ளி சந்திரசேகர் என்பவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில், போட்டியிடுகின்ற வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் அவரை ஒரு மாடு என்று அவமானப்படுத்திய தாகவும், இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகார் மீதான மனுவை உடனடியாக விசாரணை செய்து வடவள்ளி சந்திரசேகர் என்பவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.