குடியரசுத் தலைவரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக நிர்வாகிகள் புகார்
ஆளுநரின் செயல்பாடு குறித்து தமிழ்நாடு சார்பில் முதலமைச்சரின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.
ஆளுநருக்கு எதிர்ப்பு
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை கூடியது. அப்போது அப்போது ஆளுநர் உரையாற்ற தொடங்கிய போது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சியினர் வாழ்க தமிழ்நாடு, என்று கூறி ஆளுநர் இருக்கையை முற்றுகையிட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி வந்தார். அப்போது தமிழக அரசு தயாரித்த அந்த உரையில் இருந்த அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் மற்றும் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தனது உரையில் புறக்கணித்தார்.
பாதியில் வெளியேறிய ஆளுநர்
இது குறித்து அவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் தனது உரையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளது வருந்தத்தக்கது. ஆளுநரின் உரை அவை குறிப்பில் இடம் பெறாது எனக் கூறி தீர்மானம் நிறைவேற்ற கூறிய நிலையில் தீர்மானம் நிறைவேறியது.
அப்போது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென மரபுகளை மீறி புறப்பட்டுச் சென்றார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசு தலைவரிடம் புகார்
இந்தநிலையில் அவையின் மரபுகளை மீறி ஆளுநர பாதியில் புறப்பட்டு சென்றார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

அதன் பின் அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி நடந்துகொண்ட விதம் பற்றி குடியரசுத் தலைவரிடம் கூறினோம் என்றார்.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணிப்பதே ஆளுநரின் நோக்கம் என் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.