இஸ்லாமியர்,கிறிஸ்தவர்கள் குறித்த சர்ச்சை பேச்சு - சீமான் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
சர்ச்சை பேச்சு
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் பேசிய சீமான் 'நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தேவனின் பிள்ளைகள் என்று, ஆனால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று பேசினார்.
திராவிட கட்சிகளுக்கும், காங்கிரஸுக்கும் வாக்களித்து இவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் தமிழகத்தில் நடைபெறும் அநீதிக்கும்,அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பை கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் ஏற்க வேண்டும் என்று பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல பொது மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த பேச்சுக்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் தெரிவித்தனர்.
சீமான் மீது புகார்
சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.