இளையராஜா குறித்து சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் புகார்

Ilayaraja Chithra lakshmanan Chai with Chithra
By Petchi Avudaiappan Jul 27, 2021 06:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து இழிவாக பேசியதாக இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த பிப்ரவரி மாதம், நடிகர் சித்ரா லட்சுமணன் தான் நடத்தும் "Chai with chithra" என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் திரைப்பட கதாசிரியரும் இயக்குனருமான ரத்னகுமாரை வைத்து பேட்டி எடுத்தார்.

இந்த பேட்டியில் ரத்னகுமார் என்பவர் இசைஞானி இளையரஜாவை அவரது ஜாதியை மையமாக வைத்து இழிவாக பேசி உள்ளார். அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக மார்ச் மாதம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே மீண்டும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.