பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம் - இயக்குநர் மீது போலீசில் புகார்

baakiyalakshmi பாக்கியலட்சுமி
By Petchi Avudaiappan Mar 21, 2022 07:22 AM GMT
Report

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான்.

அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள், ஒரு பக்கம் பாக்யாவை எப்படி விவாகரத்து செய்வது என யோசனை என ரசிகர்களை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பில் எகிற வைக்கிறது. 

இதில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் பிசியோதெரபிஸ்ட்களை தவறாக சித்தரிப்பதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.