“கொலை மிரட்டல் விடுக்கிறார்” - பிரபல சீரியல் நடிகை மீது புகார்

Threatened to kill Actressjeyalakshmi
By Petchi Avudaiappan Sep 14, 2021 01:28 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report
Courtesy: Q

பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை பி. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மீது சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி சமீபத்தில் பாஜகவில் இணைந்து கட்சி செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அவர் மீது சென்னை பாடியைச் சேர்ந்த கீதா என்ற பெண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் தனது கணவர் ஒன்றரை வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார் என்றும், சில பெண்களுடன் நான் சேர்ந்து செம்பருத்தி என்ற பெண்கள் சுய உதவிக்குழுவை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகையும் பாஜகவைச் சேர்ந்த பி. ஜெயலட்சுமி, அவருடைய மகள் அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ், அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் எங்கள் மகளிர் சுயஉதவிக்குழுவின் இக்கட்டான சூழ்நிலையை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டனர். .

குழுவில் உள்ள உறுப்பினர் வங்கி கணக்கில் கொடுத்த தொகைக்கு பத்து பைசா என்ற வட்டியை எடுத்துக்கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தினார்கள். மேலும், அதற்காக ஒவ்வொரு நபர்களிடம் இருந்து அவரவர் வங்கி காசோலைகளை ஜாமீனாக பெற்று வட்டிக்கு கொடுத்தனர்.

நாங்களும் மாதம் மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த தொகைகளை வட்டி என்று கூறியும் அசல் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். மேலும், ஜெயலட்சுமி, அனகா மற்றும் சார்லஸ் ஆகிய மூவரும் சேர்ந்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து எங்களையும், எங்கள் வீட்டாரையும் கூண்டோடு அழித்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீதா தெரிவித்துள்ளார்.