கமல் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை கோரி புகார் - நடந்தது என்ன?

Shruti Haasan election kamal action
By Jon Apr 08, 2021 03:04 PM GMT
Report

ட்டப்பேரவை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடந்தது முடிந்தது. 234 தொகுதிகளில் மொத்தம் அமைக்கப்பட்ட 88,294 வாக்குச்சாவடிகளில் 72.78 சதவீத வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி இருந்தன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் விதிகளை மீறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர்.

கமல் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை கோரி புகார் - நடந்தது என்ன? | Complaint Action Kamal Daughter Sruthihasan

அந்த புகாரில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன், வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிக்குள் பார்வையிட அங்கீகாரம் உள்ளது. ஆனால், அவருடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் அனுமதி இல்லை. விதிகளை மதிக்காமல், அவர் அத்துமீறி நுழைந்திருக்கிறார். எனவே, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.