அப்போ எனக்கும் பசிக்கும்ல..! உயர் அதிகாரியின் உணவை திருடி சாப்பிட்டதாக நாய் மீது புகார்

United States of America Viral Photos
By Thahir Jan 30, 2023 10:39 AM GMT
Report

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் உயர் அதிகாரியின் உணவை திருடி சாப்பிட்டதாக கூறி நாய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலியான உணவு பத்திரம் 

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் ஜெயிலில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர் சம்பவ நாளன்று மதியம் வழக்கம் போல் வீட்டில் இருந்து கொண்டு வந்த மதிய உணவை தனது அறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது போலீஸ் நாய் ஒன்று அவரின் அறைக்கு வெளியே நின்றுள்ளது. இந்த நிலையில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொரு அதிகாரி ஒருவர் அவரிடம் உதவி கேட்க அந்த உயரதிகாரி சாப்பாட்டை அப்படியே வைத்தப்படி எழுந்து சென்றுள்ளார்.

நாய் மீது புகார் 

பின்னர் திரும்பி வந்து பார்த்த போது சாப்பாடு டப்பா காலியாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி வெளியே நின்ற போலீஸ் நாய் மீது சந்தேகம் அடைந்துள்ளார்.

Complaint about dog stealing food

இதையடுத்து தனது மதிய உணவை போலீஸ் நாய் சாப்பிட்டு விட்டதாக கூறி புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தற்போது நாயின் புகைப்படமும், காலியான சாப்பாடு பாத்திரமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.