பொதுமக்களை ரொம்ப கலாய்குறாங்க... யூடியூப் சேனல்கள் மீது புகார் - குமுறும் VJ
5 பிராங்க் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தனக்கு மிரட்டல் போன் கால் வருவதாகவும் ரோகித் குமார் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
மக்களை இடையூறு செய்யும் பிராங்க் சேனல்கள்
அண்மைகாலமாகவே யூடியூப்பில் பிராங்க் சேனல்களின் ஆதிக்கம் என்பது அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் செல்லும் மக்களை பயமுறுத்தும் வகையில் பிராங்க் சேனல்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கோவையில் பொது இடங்களில் பிராங்க் செய்த யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ரோகித் குமார் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களை கலாய்த்து அசிங்கப்படுத்தும் 5 யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்திருப்பதாகவும், பொதுமக்களை அசிங்கப்படுத்தி அதன் மூலம் வரக்கூடிய வருவாய் மூலம் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
பொதுமக்களை கலாய்க்கும் வீடியோக்களை பார்க்கும் அவர்களது உறவினர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள் அதற்காக இந்த புகாரை அளித்துள்ளேன்.
மேலும், தன் தொலைபேசிக்கு தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்தார்.
வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு கமிஷ்னர் அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக கூறியிருப்பதாக தெரிவித்தார்.