என்ன மணிஹெஸ்ட் பார்க்கணுமா? அப்போ லீவு எடு கொண்டாடு !
உலக அளவில் பலரும் எதிர்பார்க்கும் மணிஹெய்ஸ்ட் 5 வெளியாவதை தொடர்ந்து ஒரு தனியார் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் மக்கள் தற்போது படங்களை விட வெப் சீரிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் உலக மக்கள் அனைவருக்கும் பிடித்தமான தொடர் மணி ஹெய்ஸ்ட். ஏற்கனவே நான்கு சீசன் வெளியாகி வரவேற்பை பெற்றது. மணிஹெய்ஸ்ட் 5வது தொடர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
இதனால் கடுமையான விளம்பர வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் மணிஹெய்ஸ்ட் பீவரில் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறையே அளித்துள்ளது.
நெட்பிளிக்ஸ் அண்ட் சில் என்ற பெயரில் செப்டம்பர் 3ம் தேதி விடுமுறை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவையில்லாமல் அன்றைய தினம் யாரும் பொய்க்காரணங்களை கூறி விடுமுறை எடுப்பதை தவிர்க்கவே இந்த விடுமுறை என நகைச்சுவையாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.