வேலை நேரத்தில் சாப்பிட கூடாது நிறுவனத்தின் எச்சரிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்..!

Viral Video
1 மாதம் முன்

தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் உணவு சாப்பிட கூடாது என எச்சரிக்கை விடுத்து வெளியான அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தில் எந்த ஊழியரும் சாப்பிடக்கூடாது.வேலை நேரத்தில் சாப்பிடுவது தடை செய்யப்பட்டு இருப்பதாகவும், சக ஊழியர்கள் சாப்பிடுவதை மற்ற ஊழியர்கள் காட்டிக் கொடுத்தால் 20 டாலர் சன்மானம் வழங்கப்படும் என்றும்,

ஒரு ஊழியர்க்கு மூன்று முறைகள் மட்டுமே எச்சரிக்கை விடப்படும் என்றும்,4-வது முறை அவர் அதே தவறு செய்தால் அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அறிக்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கவலை தெரிவித்துள்ளார். இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்செயலுக்கு சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் காட்டிக் கொடுத்தால் 20 டாலர் சன்மானம் என்பது சக ஊழியர்களின் நட்பை கெடுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.