ஊரடங்கு அமல்- கோவில் வாசலில் நின்று திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டால், இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்திலுமே பக்தர்கள் சென்று வழிபாடுகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட நிலையில், புதுமண ஜோடியினர் அம்மன் சன்னதி வாசலில் நின்றவாறு தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மதுரை மட்டுமல்லாது, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தை நடத்துவது வழக்கம்.
ஊரடங்கு அமலில் இருப்பதால், பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருக்கக்கூடிய நான்கு கோபுர வாயில்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.