காமன்வெல்த் - பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி - குவியும் பாராட்டு
காமன்வெல்த் விளையாட்டு
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, கடந்த 28ம் தேதி, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் சுமார் 72 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இப்போட்டியில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய அணி வெற்றி
இந்நிலையில், மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் விளையாடி வரும் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.
பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளதால் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.