காமன்வெல்த்... ஒரே நாளில் 4 தங்கத்தை தட்டி தூக்கிய இந்தியா!

Sumathi
in விளையாட்டுReport this article
காமன்வெல்த் போட்டியில் 4 தங்க பதக்கங்களை ஒரே நாளில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
குத்துச்சண்டை
22-வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள ப்ரமிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் அமித் பங்கல் என்பவர் ஆடவருக்கான 51 கிலோ எடைப் பிரிவு பிளை வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் களம் கண்டார்.
அவர், ஆரம்பம் முதலே இங்கிலாந்தை சேர்ந்த கியாரன் மெக்டொனால்டை இறுதி சுற்றில் ஆக்ரோஷ குத்துகளால் நிலைகுலையச் செய்தார். இறுதியில், 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அவரை தோற்கடித்து தங்கம் வென்றார்.
ட்ரிபிள்ஜம்ப்
இந்தியாவைச் சேர்ந்த நீத்து கங்காஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த டேமி ஜேட் என்பவருடன் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு மிட்டில்வெயிட் குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் மோதினார். இறுதியில் , 5-0 என்ற புள்ளிகணக்கில் நீத்து கங்காஸ், தங்கப்பதக்கத்தை வென்றார்.
தடகளத்தில் மும்முறை தாண்டுதல் என அழைக்கப்படும் ட்ரிபிள்ஜம்ப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த எல்டாஸ் பால், 17 புள்ளி 03 மீட்டர் நீளம் தாண்டி, முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஹாக்கி தொடர்
மகளிர் ஹாக்கி தொடர் போட்டியில், இந்தியா - நியூசீலாந்து அணிகள் விளையாடின. இந்த விளையாட்டில் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி நொடியில் நியூசீலாந்து பதில் கோல் அடித்து சமம் ஆனது. எனவே வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது.
இதில், 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா மகளிர் அணி வென்ற வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அணு ராணி என்பவர் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஓட்ட போட்டி
சந்தீப் குமார் என்பவர் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றார். குத்துச் சண்டையில் தீவிரமான விளையாட்டை ஆடி நிகத் ஜீரன், 5-0 என்ற புள்ளிகணக்கில் தங்கப்பதக்கத்தை வெற்றி பெற்றார்.
சரத் கமல், ஸ்ரீஜா அகுல்லா அணி டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், தங்கம் வென்றது.
தற்போது, இந்திய அணி புள்ளி பட்டியலில் 18தங்கம், 15வெள்ளி, 22வெண்கலம் என 55 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது.