காமன்வெல்த் - 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்திய இந்தியா

Cricket India Commonwealth Games
By Sumathi Aug 04, 2022 05:37 AM GMT
Report

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கிரிக்கெட் 

அரையிறுதிக்கும் இந்தியா தகுதி பெற்றது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன.

காமன்வெல்த் - 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்திய இந்தியா | Commonwealth Cricket Indian Womens Team Won

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணியை கடந்த 31ம் தேதி எதிர்கொண்டது.

பார்படாஸ் 

அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், பார்படாஸும் மோதின. இதில் பார்படாஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

காமன்வெல்த் - 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்திய இந்தியா | Commonwealth Cricket Indian Womens Team Won

முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராட்ரிக்ஸ் 56 ரன்களும், ஷஃபாலி வர்மா 43 ரன்களும் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி

தீப்தி ஷர்மா 34 ரன்கள் எடுத்தார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பார்படாஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சார்பில் ரேணுகா சிங் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு 2ஆவது வெற்றியாகும்.