உயிரிழந்த மாணவி சத்யா வீட்டிற்கு சென்று ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல்
கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆணையர் சங்கர் ஜிவால்.
மாணவி கொலை - ஆணையர் ஆறுதல்
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மகள் இறந்த துக்கம் தாங்காமல், தந்தை மாணிக்கம் அவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள், கணவர் மற்றும் மகளை இழந்து தவிக்கும் தாயாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.