தோனி இல்லைனா சென்னை அணி அவ்வளவு தான் - விமர்சித்த சோயிப் அக்தர்..!
தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தால் நிச்சயம் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டின் 15 வது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது.இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தோனி அறிவித்தார்.
இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடரை துவங்கியது.
அடுத்தடுத்து படு தோல்விகளை சந்தித்தது சென்னை அணி.ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டது.ஜடேஜாவும் இந்த தொடரில் மிக மோசமாக விளையாடினார்.
இதனிடையே ஜடேஜா தனது வழங்கப்பட்ட கேப்டன் பதவியிலிருந்து விலகி கொண்டார். மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர், தோனி ஓய்வு பெற்றுவிட்டால் சென்னை அணியில் பெரிய பிரச்சனை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்படவில்லை என்று கூறினார். தோனி வெளியேறினால் என்ன செய்ய போகிறார்கள்?திடீரென்று ஏன் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தார்கள்? முடிவை அவர்களால் தான் விளக்க முடியும் .
அடுத்த சீசனில் தெளிவான மனதுடன் வர வேண்டும். . அவர்களுக்குத் தேவையான வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.