5 நாள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவ தளபதி இஸ்ரேல் பயணம்

Army Indian Commander Tour
By Thahir Nov 14, 2021 08:15 PM GMT
Report

இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே, அலுவல் முறை பயணமாக நேற்று இஸ்ரேல் புறப்பட்டு சென்றார்.

அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இந்திய ராணுவத்தின் பலம் மற்றும் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு மேம்பாடு பற்றி ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவத்துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோர் இஸ்ரேல் பயணம் சென்று திரும்பிய ஒரு வாரத்திற்குப் பின்பு,

நரவனே அங்கு சென்றுள்ளது இருநாட்டு உறவு மற்றும் ராணுவ கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.