தமிழக அரசின் நெய்தல் உப்பு : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

M K Stalin
By Irumporai 1 மாதம் முன்

தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நெய்தல் உப்பு விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

நெய்தல் உப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு விறபனையினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக  அரசின் நெய்தல் உப்பு : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Coming Neithal Salt Tamil Cm Stalin Started

இதந்த திட்டத்தின் மூலம்  உப்பு உற்பத்தி இல்லாத மழை காலங்களான அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் பாதிக்கப்பட்டும் குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுவதற்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

அதேபோல் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் நெய்தல் உப்பு' என்ற பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையையும் தமிழக முதல்வர் துவங்கி வைத்துள்ளார்.

இதில் தொழில்துறை மற்றும் தொழிலாளர்கள் சார்ந்த திட்டம் என்பதால் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோரும் பங்கேற்றனர்.