நான் விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க வருவேன்: சசிகலா
விரைவில் தொண்டர்களையும் ,பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை திநகர் இல்லத்தில் அவரது படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று சென்னையில் மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய சசிகலா.
பின்னர் செய்தியாளட்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.

மேலும், புரட்சித்தலைவி நமக்கு சொல்லிவிட்டு சென்றது , தமிழகத்தின் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்பது தான். அதை மனதில் வைத்து நம்முடைய உடன்பிறப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும். அதை செய்வீர்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஏனென்றால் நீங்கள் புரட்சித்தலைவியின் உண்மை தொண்டர்கள்.நிச்சயமாக நீங்கள் இது செய்வீர்கள் நான் உங்களுக்கு துணை இருப்பேன்.
நான் விரைவில் தொண்டர்களையும் ,பொதுமக்களையும் சந்திக்க வருவேன் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.