நழுவவிட்ட வாய்ப்பினை வரும் தேர்தல்களில் மீட்போம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்!
நழுவ விட்ட வெற்றி வாய்ப்பை வரும் தேர்தல்களில் மீட்போம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
தமிழக அளவில் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் நாம் பின்தங்கினோம். முதலமைச்சர் வேட்பாளராக நின்ற எடப்பாடியார் அவரது தொகுதியில் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
மு.க. ஸ்டாலினோ அவரது கொளத்தூர் தொகுதியில் 70,550 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார்.
ஆக முதலமைச்சர் வேட்பாளராக நமது எடப்பாடியாரைத்தான் மக்கள் விரும்பினார்கள். 2
வருடங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் வாக்குகள் பெற்ற திமுக.
இன்று 234 தொகுதிகளிலும் 1 கோடியே 56 லட்சம் வாக்குகள்தான் பெற்று இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்குகள் பெற்ற நாம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1 கோடியே 43 லட்சம் வாக்குகள் பெற்று இருக்கிறோம்.
கடந்து பத்து ஆண்டுகளாக, அதிமுக தமிழ்நாட்டு மக்கள் விரும்பிய hatrick சாதனையை நாம் பெற முடியவில்லை. நாம் நழுவ விட்டு விட்டோம்.
தங்கத் தாம்பூலத்தில் வைத்து நாமே வெற்றிக்கனியை திமுகவிடம் கொடுத்து விட்டோம்.
நம்மிடையே பிரிவினை, பிரச்சினை என்று மற்றவர்கள்தான் கூறுகிறார்கள். நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

இதே ஒற்றுமையைப் பின்பற்றி, மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதனை மனதில் கொண்டு செயலாற்றி நழுவ விட்ட வெற்றி வாய்ப்பை வரும் தேர்தல்களில் மீட்போம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.