வசமாக சிக்கிய டிஜிபி ராஜேஷ் தாஸ் : செக் வைத்த சிபி சிஐடி
சமீபத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய ராஜேஷ் தாஸ் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, டிஜிபி திரிபாதியிடம் ராஜேஷ் தாஸுக்கு எதிராக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது கடந்த ஆண்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், இந்த பாலியல் புகாரால் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது பத்திரிகையில் வந்த செய்தியை வைத்து இந்த வழக்கை கையிலெடுத்த மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் சிறப்புப் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கு ,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
ஏற்கனவே பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியிருந்த ராஜேஷ் தாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது கடும் விமர்சனம் ஆனது .
தற்போது வசமாக சிக்கியுள்ள ராஜேஷ்தாஸ் வழக்கு சிபிசிஐடி கையிலெடுத்திருப்பதால் பல உண்மைகள் வெளி வரலாம் என கூறப்படுகிறது.