80,000 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் அரிய நிகழ்வு - வானில் அதிசயம்!

Karnataka India Telangana
By Sumathi Oct 19, 2024 08:00 AM GMT
Report

வான் பகுதியில் வால் நட்சத்திரம் பயணம் செய்யும் நிகழ்வை காணலாம்.

வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரம் ஒன்று சுமார் 80,000 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் தென்படவுள்ளது. இதற்கு சி/2023 ஏ3 என பெயரிடப்பட்டுள்ளது. இதனை 2023ல் ஜனவரி மாதத்தில் வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

comet

தொடர்ந்து, அந்த வால் நட்சத்திரத்தின் பயணம் திசை திரும்பி உள்ளது. இதன் காரணமாக, பூமியில் இருந்து அதை நாம் காணலாம். சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும்போது,

பூமியை நோக்கி வரும் ராட்சத  வால் நட்சத்திரம் : பேரழிவை ஏற்படுத்துமா ?

பூமியை நோக்கி வரும் ராட்சத வால் நட்சத்திரம் : பேரழிவை ஏற்படுத்துமா ?

எப்படி பார்க்கலாம்?

அதன் நீண்ட வால் போன்ற பகுதியை நம்மால் தெளிவாக பார்க்க முடியும். காலை நேரத்தில் சூரிய உதயத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம்.

80,000 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் அரிய நிகழ்வு - வானில் அதிசயம்! | Comet In Indian Sky A Rare Event Details

இந்தியாவின் தமிழகம், லடாக், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளில் தென்பட்ட இந்த வால் நட்சத்திரத்தை வானியல் நிபுணர்கள் பலரும் படம் பிடித்து பகிர்ந்து வருகின்றனர்.

24-ஆம் தேதி வரை தெளிவாக பார்க்க கூடிய வகையில் வால் நட்சத்திரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.