திருட்டு ரயிலில் வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் - சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி

Kasthuri Tamil nadu
By Irumporai Mar 04, 2023 12:25 PM GMT
Report

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கஸ்தூரி விளாசல்

பத்திரிக்கைகளின் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கஸ்தூரி, இது குறித்து இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை திட்டுள்ளார்.

திருட்டு ரயிலில் வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் - சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி | Comes On The Train Lets Beauty Throne Kasthuri

அதில், வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

திருட்டு ரயில்

இதற்கு புதுச்சேரி ஐடி விங் காயத்ரி ஸ்ரீகாந்த், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஊதுபத்தி உருட்டியதை பேசாத வாய், திருட்டு ரயில் ஏறி தான் வந்தேன் என வெளிப்படையாக சொல்லி பல கோடி தமிழ் குடும்பங்களை தலைமுறைகள் கடந்து வறுமையில் இருந்து மீட்டு சுயமரியாதையூட்டிய கலைஞரின் ஆட்சியில் யாதும் ஊரே யாவரும் கேளிர் தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்