மகளுக்காக தாயாக மாறிய நடிகர் சதீஷ் - நெகிழ வைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்

actorsathish
By Petchi Avudaiappan Oct 28, 2021 03:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் சதீஷ் தனது மகளுக்காக தாயாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2010 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சதீஷ் தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகராக புகழ் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து சன்னி லியோனுடனான ஓ மை கோஸ்ட், நாய்சேகர் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் சதீஷ் நடித்து வருகிறார். அவ்வப்போது தம்முடைய சமூக வலைதளங்களின் மூலமாக ஆக்டிவாக இருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளை பகிர்வது வழக்கம். 

அந்த வகையில் இன்று தன்னுடைய மகளுடனான சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புடவையை போர்த்தியபடி, மகளை தூக்கிப் பிடித்திருக்கும் சதீஷ், “ அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதெல்லாம்..... இனிமே கேப்ப!” என பதிவிட்டுள்ளார். 

அவரின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளதோடு அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.