வடிவேலுக்கு பிறகு காமெடி பீஸ் நம்ம அண்ணாமலைதான் : காங்கிரஸ் எம்.பி கிண்டல்
வடிவேலுக்கு பிறகு காமெடி பீஸ் நம்ம அண்ணாமலைதான் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கிண்டல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மற்ற அரங்கில் நேற்று (5.9.2021) நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக பாஜக எம்.எ.ஏக்கள் பலம் அதிகரிக்கும் எனவும் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
4 என்பது எட்டு ஆகுமா இல்லை? 150 ஆகுமா? இல்லை மீண்டும் பழைய பழைய நிலைக்கே திரும்புமா? என தெரியவில்லை அவர்களுடைய கனவு கனவாகவே இருக்கட்டும் என கூறினார்,

மேலும் கடவுள் இருப்பதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்வாரா என பாஜக தலைவர் அண்ணாமலை கேட்கிறார். அவர் இப்படி பேசுவதை சீரியசாக எடுத்துக் கொண்டால் அது நமக்கு காமெடியாக போய்விடும் எனக் கூறிய மாணிக்கம் தாகூர்.
வைகைப்புயலுக்கு பின்னால் நமக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான் என்றும் , வைகை புயலுக்கு பின்னால் மங்குனி மந்திரி கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்தார். அவருக்கு பின்னால் அண்ணாமலை வந்துவிட்டார். அவர் ஒரு காமெடி பீஸ்
என தெரிவித்தார்.