சாரி...சினிமாவில் இதைச் செய்வதெல்லாம் ரொம்ப கஷ்டம் : சமந்தா திட்டவட்டம்
காமெடி செய்து மக்களை சிரிக்க வைப்பது எவ்வளவு கடினம் என்பது ஓ பேபி படத்தில் நடித்த பிறகே தெரிந்தது என சமந்தா கூறியுள்ளார்.
சைமா சினிமா விருது வழங்கும் விழவில் தெலுங்கில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்திற்கான விருது அவருக்கு கிடைத்தது. விழாவில் சமந்தாவுக்கு பதில் அந்த விருதை நடிகர் நானி வாங்கினார். இந்நிலையில் காமெடி படத்திற்காக விருது பெற்றது குறித்து சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ஹீரோயினை மையமாக கொண்டது, சமூகத்திற்கான மெசேஜ் என்று இல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் ஓ பேபி படத்தில் நடிக்க விரும்பினேன்.எனக்கு காமெடி ரொம்ப புதுசு. அதனால் காமெடி பண்ண வேண்டும் என்று விரும்பினேன்.
அந்த படத்தில் நடித்தபோது தான் காமெடி செய்வது எவ்வளவு கடினம் என்பதை தெரிந்து கொண்டேன் என்றார்.
மேலும் ஓ பேபி படத்திற்குரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் தற்போது வெளியே சென்றால் இளைஞர்கள் மட்டும் அல்ல வயதானவர்கள் கூட என்னிடம் வந்து, ஓ பேபி படம் தான் எங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்கிறார்கள் என சமந்தா தெரிவித்துள்ளார்.