அஜித் அந்த மாதிரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் புல்லுமேல அவர் பண்ணது.. - நடிகை பிரியங்கா பளீச்!
நடிகர் அஜித் குறித்து காமெடி நடிகை பிரியங்கா பேசியுள்ளார்.
நடிகை பிரியங்கா
90ஸ்-களில் மிகவும் பிடித்தமான காமெடி நடிகையாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா. வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன், பல காமெடிகளில் கலக்கியிருப்பார்.
துணை நடிகையாகவும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்திலும் பிரியங்கா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர், நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "அஜித் எப்பவும் சூப்பர். அவரு எனக்கு அண்ணா மாதிரி.
அஜித்த காணோம்
ஒரு படத்தில் நடிக்கும்போது தொடர்ந்து ஷூட்டிங் பண்ணிட்டே இருந்தாங்க. திடீர்னு பார்த்தா அஜித்த காணோம். எல்லாரும் அவரு எங்க எங்கனு தேடிட்டு இருக்காங்க.
சரி அவர காணோம் கொஞ்ச நேரம் பிரேக் விடலாம்னு சொன்னாங்க. அப்போ நான் வந்து என்னோட அம்மா கிட்ட உட்கார்ந்தேன். என்னம்மா.. ஷாட்டுக்கு போலையானு அம்மா கேட்டங்கா. இல்லமா அஜித்த காணோம், எங்கயோ போயிருக்காருனு அம்மாகிட்ட சொன்னேன்.
அப்போ எங்க அம்மா "அப்படியா... இந்த படுத்துருக்கு பாரு" அப்படின்னு சொன்னாங்கா. அஜித் ஒரு துணிய மூஞ்சுல போட்டு புல்லு மேல படுத்து தூங்கிட்டு இருந்தாரு. யார்கிட்டையும் சொல்லாதிங்கனு எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு படுத்துருக்காரு" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.
You May Like This Video