என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான்; சொல்லி அழக் கூட ஆள் இல்லை - நடிகை பிரேமா பிரியா!

Tamil Cinema Vadivelu Tamil Actress Actress
By Jiyath Jul 31, 2023 01:56 PM GMT
Report

பிரேம பிரியா

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் பிரேம பிரியா. சிறிய காமெடிகளில் தோன்றினாலும் இவரின் நடிப்பு அருமையாகவே இருக்கும். வல்லவன்,சிங்கம், ராஜா ராணி,மனிதன்,ஹர ஹர மஹா தேவகி,ஆடை, சபாபதி என்று பல படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் பல படங்களில் நடித்திருப்பார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் அதிகமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் அண்மையில் இவர் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

பேட்டி

அந்த பேட்டியில் "கொரோனாவால் முதலில் என் அக்காவை பறிகொடுத்தேன். அதற்குப் பிறகு பத்தே நாளில் என் அப்பா இறந்து விட்டார். இரண்டு மாதம் கழித்து என் கணவர் சர்க்கரை வியாதியின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்து காலமானார். அவர் போன பிறகு என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை.

என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான்; சொல்லி அழக் கூட ஆள் இல்லை - நடிகை பிரேமா பிரியா! | Comedy Actress Prema Priya About Vadivelu Ibc

சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு வேலை செய்யலாம் என்று சென்ற போதும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. என்ன ஒரு நடிகையாகத்தான் இந்த சமுதாயம் பார்த்தது. ஒரு நடிகைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனது கஷ்ட்டங்களை சொல்லி அழுக கூட ஆள் இல்லாததால் தான் மீடியாக்களில் சொல்லி அழுதேன். ஆனால் இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.

இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். நடிகர் சூரி எனக்கு பண உதவி செய்தார். வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலுதான். பல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தது. ஆனால், வடிவேலு இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி விடுவார்.

இதனால், பல நல்ல படங்களின் வாய்ப்பு பறிபோனது. வடிவேலுவைப் பற்றி நான் மீடியாவில் பேசியதால், ஒரு இயக்குநர் என்னை மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று பிரேமா பிரியா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.