வடிவேலு நல்லா நடிச்சுட்டா இப்படி பேசுவாரு; அப்புறம் மோசமான வேலை பாப்பாரு - கொந்தளித்த ஆர்த்தி
நடிகர் வடிவேலு குறித்து ஆர்த்தி பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஆர்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
சமீப காலமாக அவருடன் நடித்த சக நடிகர்கள் பலர் அவரை குறித்த நெகடிவ் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில், வடிவேலுவுடன் நடிக்கும் போது நம்ம நன்றாக நடிச்சுட்டா அந்த சீன் முடிந்ததும் செல்லம் செமையா இருந்துச்சு.
வடிவேலு இப்படித்தான்..
நல்லா பண்ணிட்ட என்று மனதார பாராட்டுவார். ஆனால் அந்த சீன் படத்தில் இருக்கவே செய்யாது. காரணம் தன்னைவிட நன்றாக ஒரு காமெடி நடிகர் நடித்து விட்டால் அந்த படத்தில் அந்த சீனே இல்லாமல் செய்து விடுவது தான் வடிவேலுவின் கேரக்டர். ஒரு படத்திற்காக கணவர் கணேஷ் மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு டைரக்டர் வந்து உங்க கேரக்டருக்கு வடிவேலு வேறொரு நடிகரை கூப்பிட்டு வந்துட்டாரு. அவரை தான் நடிக்க வைக்க போறோம் என்று சொல்லிவிட்டார். 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும், என்னையும் தான் முதலில் முடிவு செய்து வைத்திருந்தார்கள்.
ஆனால் வடிவேலு அவர்களெல்லாம் பார்த்த மூஞ்சிகள் என்று சொன்னதாலேயே விலக்கி விட்டார்கள்.
அதோடு எங்க மூஞ்சி பார்த்த மூஞ்சினு சொன்னாரு. இப்ப வடிவேலு பார்க்கவே பல வருஷம் ஆகிவிட்டது. இதெல்லாம் கர்மா தான். பாம்புனா கொத்த தான் செய்யும் அதை மாற்ற முடியாது. அதனால நம்ம பாட்டுக்கு போயிட்டே இருக்கணும் எனத் தெரிவித்துள்ளார்.