வீட்டில் சடலமாகத் தொங்கிய பிரபல காமெடி நடிகரின் மனைவி!
நடிகர் உல்லாஸ் பந்தலம் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உல்லாஸ் பந்தளம்
மலையாள படங்களில் நடித்து வருபவர் உல்லாஸ் பந்தளம். தொலைக்காட்சி சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின், மம்மூட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்நிலையில் இவரது மனைவி ஆஷா, மகன்கள் இந்திரஜித், சூர்யஜித்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். தன் மனைவியை காணவில்லை என நடிகர் போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து வீட்டில் விசாரணை மேற்கொண்டதில், ஆஷா தூக்கில் தொங்கியதை கண்டுபிடித்தனர்.
மனைவி தற்கொலை
அதன்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த அறிக்கையில், ஆஷா இறந்தபோது நடிகர் வீட்டில் தான் இருந்திருக்கிறார். இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், இறப்பதற்கு முந்தைய நாள் ஆஷா தன் பிள்ளைகளுடன் முதல் மாடியில் படுத்து தூங்கியுள்ளார்.
அதனையடுத்து உஷாவின் தந்தை, மனநல பிரச்சனைகளால் ஆஷா தற்கொலை செய்திருக்கக்கூடும். உல்லாஸ் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீது புகார் கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.