காமெடி நடிகர் திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி

passed away comedy actor Shankar Rao
By Anupriyamkumaresan Oct 18, 2021 12:38 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

மூத்த கன்னட நடிகரான ஷங்கர் ராவ் இன்று பெங்களூரில் உயிரிழந்த சம்பவம் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷங்கர் ராவ்.

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் இன்று உயிருடன் இல்லையே என்று ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். சில்லி லாலி என்கிற காமெடி சீரியலில் பாஸ் பலராஜுவாக நடித்திருந்தார் ஷங்கர் ராவ்.

அந்த சீரியல் அனைத்து வயதினரையும் கவர்ந்தது. ஷங்கர் ராவ் நடித்த மேலும் ஒரு சீரியலான பாபா பாண்டு சூப்பர் ஹிட்டானது. அவர் தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

காமெடி நடிகர் திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி | Comedy Actor Shankar Rao Death Shocking Incident

பெங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த ஷங்கர் ராவ், அவருடைய 84 வயதில் இன்று காலமானார். ஷங்கர் ராவின் மரண செய்தி அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.