பிரபல காமெடி நடிகர் மரணம் : சோகத்தில் திரையுலகம்
பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்.
காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா
சாதாரண காமெடியனாக வாழ்க்கையை தொடங்கிய ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். பின்னர் பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளார். ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
மாரடைப்பால் மரணம்
அப்போது அவரது மனைவி அவரின் தலையைத் தொட்டபோது கால்களில் சிறிது அசைவு ஏற்பட்டதைத் தவிர, வேறெந்த அசைவும் இல்லாமல் இருந்தார். உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சுயநினைவின்றி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ராஜு ஸ்ரீவஸ்தவா மறைந்ததை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.