‘‘நான் இங்கு நடிக்க வரலை மக்களுக்காக வந்திருக்க்கேன்’’ ஆவேசமான கமல்ஹாசன்

people actor kamal politician
By Jon Mar 22, 2021 02:10 PM GMT
Report

கோவை பகுதியில் கொங்கு மொழியில் பேசுமாறு கட்சி தொண்டர், கேட்க தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன்ஆவேசமானார். கோவை பீளமேட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த ஒருவர் அவரை கோவை (கொங்கு) பாஷையில் பேசுமாறு கேட்ட போது ‘‘நான் நடிக்க வரவில்லை மக்களின் எதிர்காலத்தை பேச வந்திருக்கிறேன்’’ என ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், எனக்கு எந்த சாயம் பூசினாலும் ஒட்டாது, அது காவியா இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி.என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களிடம் வரி விதிப்பு மற்றும் டாஸ்மாக் ஆகியவைகளை வைத்து மட்டுமே வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடிட்டு அரசை லாபகரமாக நடத்த முடியும் என்றார். 40 வருடங்களாக மதுபானத்தை பழக்கிவிட்டார்கள். இப்போ அது மனவியாதி, தமிழர்களுக்கு ரத்தத்தில் ஓடுகிறது ஆல்ககால். அதை உடனே நிறுத்திவிட்டால், பல கொலைகள் நடக்கும்,என தனது பிரச்சார உரையில் கமல்ஹாசன் கூறினார்.